மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் மர்மமான முறையில் மரணம்.
இவர் கடமை முடிந்து தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது கள்ளியடி ஆத்திமோட்டை பகுதியில் வைத்து மர்மமான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.
-இவரது தலை மற்றும் உடல் பாகங்களில் பாரிய காயம் காணப்பட்டுள்ளதோடு அவர் இனம் தெரியாத நபர்களினால் கூறிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
குறித்த கிராம அலுவலகர் பள்ளமடு வைத்தியசாலைக்குகொண்டு செல்லப்பட்டு பின்னர் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக இலுப்பைக்கடவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரின் மரணம் தொடர்பாக இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவம் தீவிர விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இடம் பெற்று வரும் சட்ட விரோத மண் அகழ்வு உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்துள்ளமையும் தெரிய வருகின்றது.
தற்போது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் மர்மமான முறையில் மரணம்.
Reviewed by Author
on
November 04, 2020
Rating:

No comments:
Post a Comment