லங்கா பிரீமியர் லீக் கிண்ணத்தைக் கைப்பற்றியது யாழ்ப்பாண அணி!
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அணிசார்பாக, சொய்ப் மலிக் 46 ஓட்டங்களையும், திசர பெரேரா ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் தனஞ்சய லக்சன் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்நிலையில், பதிலுக்கு 189 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய காலி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்நிலையில் 53 ஓட்டங்களால் காலி அணி தோல்வியடைந்தது.
அணிசார்பாக, பானுக ராஜபக்ச 40 ஓட்டங்களையும் அசம் கான் 36 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில், உஸ்மன் சின்வாரி மற்றும் சொய்ப் மலிக் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
லங்கா பிரீமியர் லீக்-2020 கிண்ணத்தை வென்றுள்ள யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணிக்கு எமது வாழ்த்துக்கள்!
லங்கா பிரீமியர் லீக் கிண்ணத்தைக் கைப்பற்றியது யாழ்ப்பாண அணி!
Reviewed by Author
on
December 17, 2020
Rating:

No comments:
Post a Comment