பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய வைரஸ் ஸ்பெய்னிலும் கண்டறிவு!
அத்துடன், இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் தீவிரமாக நோய்வாய்ப்படவில்லை என்பதால் கடுமையான பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, மாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்திற்குரிய மேலும் மூவர் கண்காணிப்பில் உள்ளதாகவும் அவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்றும் இரண்டு நாட்களில் கிடைத்துவிடும் என்றும் ஷபடெரோ தெரிவித்துள்ளார்.
இந்த மாறுபட்ட வைரஸ் தொற்று பிரித்தானியாவில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து லெபனான் மற்றும் பிரான்சில் இதுபோன்ற தொற்றாளர்கள் நேற்று கண்டறியப்பட்டிருந்தார்கள்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் ஸ்பெயினின் பிரஜைகள் மற்றும் குடியிருப்பாளர்கள் தவிர இங்கிலாந்திலிருந்து வருபவர்களுக்கு ஸ்பெயின் தடை செய்துள்ளது.
இதனிடையே, அடுத்த சில வாரங்களில் ஸ்பெயின் அரசாங்கம், 4.5 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதுடன் இது சுமார் 2.2 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்குப் போதுமானது என அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஸ்பெய்னில் 47 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையில் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வரும் ஜூன் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி போடுவார்கள் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய வைரஸ் ஸ்பெய்னிலும் கண்டறிவு!
Reviewed by Author
on
December 27, 2020
Rating:

No comments:
Post a Comment