வடக்கு மக்களின் ஒழுக்கத்தால் முதலாவது கொரோனா அலையைக் கட்டுப்படுத்த முடிந்தது: இராணுவத் தளபதி
இலங்கையின் பிரஜைகள் என்ற வகையில், தமிழ் மக்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு வழங்கி வரும் பங்களிப்பிற்காக ஜனாதிபதி, பிரதமர் சார்பில் அரசாங்கம் என்ற வகையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
வடக்கில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.
இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட வட்டுக்கோட்டை தென்மேற்கு உப்புவயல் குளத்தை இராணுவத் தளபதி இன்று திறந்து வைத்தார்.
வடக்கு மக்களின் ஒழுக்கத்தால் முதலாவது கொரோனா அலையைக் கட்டுப்படுத்த முடிந்தது: இராணுவத் தளபதி
Reviewed by Author
on
December 17, 2020
Rating:

No comments:
Post a Comment