அண்மைய செய்திகள்

recent
-

நெடுந்தீவு மக்களுக்கு வாழ்வாதாரத் திட்டம்

நெடுந்தீவு, வெட்டக்களிக் குளத்தில் சுமார் 460,000 ரூபாய் பெறுமதியான 11 இலட்சத்து ஐம்பதாயிரம் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுக்கு அமைய நீர் வளங்கள் உரப் பயன்பாட்டிற்கு வழியமைத்தல் எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நேற்று முன்தினம் (23 ) குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

 வெட்டக்களிக் குளத்தினை வாழ்வாதாரமாகக் கொண்டு சுமார் 50 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைத் திட்டத்தின் ஊடாக சுமார் 1 கோடி 50 இலட்சம் பெறுமதியான, அண்ணளவாக 15,000 கிலோ கிராம் இறால்களை அறுவடை செய்ய முடியும் என்று துறைசார்ந்தோரினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசனையில், கடந்த வருடம் வெட்டக்களி குளத்தில் விடப்பட்ட இறால் குஞ்சுகள் பிரதேச மக்களுக்கு நிறைவான பலனை கொடுத்திருந்த நிலையில், கடந்த வருட செயற்றிட்டத்தின் தொடர்ச்சியாக, குறித்த இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவு மக்களுக்கு வாழ்வாதாரத் திட்டம் Reviewed by Author on December 25, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.