அண்மைய செய்திகள்

recent
-

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். காரைநகரில் கோரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவரது வீட்டுக்கு அண்மையில் வசித்து வந்த 60 வயதுடைய குறித்த வயோதிபர் கடந்த சனிக்கிழமை முதல் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

 மூச்சுத் திணறல் காரணமாக அவர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கொவிட் நோய்த் தொற்று தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். மருத்துவர்களின் குறிப்பேட்டின்படி குருதியின் அளவு அரைவாசியாகக் குறைந்ததால் அவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அவரது இறப்புத் தொடர்பில் பிரேத பரிசோதனை செய்வதா? அல்லது பி.சி.ஆர் பரிசோதனையின் அறிக்கை கிடைத்த பின்னர் பிரேத பரிசோதனையைச் செய்வதா? என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு Reviewed by Author on December 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.