அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் அச்சம் அடைய தேவையில்லை.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள், தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்படுவதை நினைத்து பயமோ, பதட்டமோ அடைய வேண்டாம் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர்பதிராஜா தெரிவித்தார். 

 அவர் இன்று சனிக்கிழமை (19) ஊடகங்களக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,,,, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் 'கொரோனா' தொற்று உள்ளவர்கள் இருப்பார்கள் என எண்ண வேண்டாம். ஏனெனில் இங்கே கொரோனா என உறுதி செய்யப்பட்ட எந்த நோயாளரையும் வைத்து பராமரிப்பது இல்லை. உங்களை போன்ற கொரோனா தொற்றின் ஆரம்ப அறிகுறியென சந்தேகிக்கப்படும் தடிமன், இருமல், காய்ச்சல், தொண்டை நோ போன்ற வற்றுடன் வேறு நோயின் காரணமாக விடுதிக்கு அனுமதிக்காக வரும் நோயாளர்;கள் மற்றும் கொரோனா நோயின் அறிகுறி இல்லாமல் வேறு நோய்களுடன் வெளி மாவட்டங்களுக்குச் சென்று வந்ததன் காரணமாக விடுதிக்கு அனுமதிக்கப்படுபவர்கள் மட்டுமே இங்கு உள்ளார்கள். 

 எனவே நீங்கள் பயப்படத் தேவையில்லை. விடுதிக்கு நீங்கள் அனுமதிக்கப்பட்டவுடன் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படும். அத்துடன் நீங்கள் என்ன நோயின் காரணமாக விடுதிக்கு அனுமதிக்கப்பட்டீர்களோ அதற்கான முழு சிகிச்சையும் உங்களுக்கு வழங்கப்படும். பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு இரண்டு (02) நாட்கள் எடுக்கும். எனவே இந்த இரண்டு நாட்கள் மட்டுமே இப்பிரிவில் நீங்கள் தங்க வைக்கப்படுவீர்;கள். பி.சி.ஆர் முடிவு கொரோனா தொற்று இல்லை என முடிவு கிடைத்தவுடன் உங்களைச் சாதாரண விடுதிக்கு மாற்றி விடுவார்கள். பி.சி.ஆர் முடிவு கொரோனா என உறுதி செய்யப்பட்டால் மட்டுமே கொரோனா நோயார்களை பராமரிக்கும் வைத்தியசாலைக்கு நீங்கள் அனுப்பப்படுவீர்கள்.

 எனவே தேவையற்ற பயம் கொள்ள வேண்டாம். இப்பிரிவில் உங்களுக்குத் தேவையான சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மூன்று நேரமும் உணவு உங்களுக்கு வழங்கப்படும் . வீட்டில் இருந்து உணவு பெறுவதாக இருந்தாலும் பெற்றுக் கொள்ளலாம். விசாலமான தனி அறை ஒன்றில் நீங்கள் தங்கவைக்கப்படுவீர்கள். உங்களுக்கு அங்கே பொதுவான உள்ளகத் தொலைபேசி உள்ளது. அதன் மூலம் '1124' என்ற எண்ணை அழுத்தி உங்கள் பிரிவில் பணிபுரியும் பணியாளர்களுடன் 24 மணி நேரமும் தொடர்பை ஏற்படுத்தி உங்களுக்கு தேவையானவற்றை அறிந்து கொள்ளலாம். உங்களுடன் கையடக்கத் தொலைபேசி வைத்துக்கொள்ளலாம். இதற்கான மின்னேற்றி (சாஜ்ஜர்) பயன்படுத்த முடியும். 

 எந்த நேரமும் உங்கள் கையடக்கத் தொலைபேசி மூலம் உங்கள் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளலாம். உங்கள் அறையில் அழைப்பு மணி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதனை அழுத்தினால் உங்கள் தேவைகளை அறிவதற்கு பணியாளர்கள் வருவார்கள். மேற்கூறப்பட்டுள்ள தொடர்புகள் உங்களுக்கு திருப்தியாகக் கிடைக்காவிடில் வைத்தியசாலை பொது தொலைபேசிக்கு இலக்கம்:- 023-2222349 உடன் தொடர்பு கொண்டு (உங்கள் கையடக்கத் தொலைபேசியில் இருந்து) உங்களுக்கு தேவையானவற்றை அறிந்து கொள்ளலாம். பார்வையாளர்கள் உங்கள் அறைக்கு வருவது அனுமதிக்கப்பட்ட மாட்டாது. 

 எனவே உங்கள் தேவைகள் அனைத்தும் வைத்தியசாலை பணியாளர்கள் மூலமே பெற்றுக் கொள்ள முடியும். -எனவே நோயாளர்களே தயவு செய்து நீங்கள் இப்பிரிவில் தங்கி இருக்கும் இரு நாட்களும் பொறுமையாக எங்களுடன் ஒத்துழையுங்கள். உங்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கே இந்த நடைமுறைகள் என்பதனை உணர்ந்து செயற்படுமாறு அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 



மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் அச்சம் அடைய தேவையில்லை. Reviewed by Author on December 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.