அண்மைய செய்திகள்

recent
-

தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் உள்ளமை உறுதி!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகள் அனைத்தும் தரமற்றவை என இலங்கை தரச்சான்றுகள் நிறுவகம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய எப்லடொக்சின் காசினோஜென் என்ற இரசாயனம் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் குறித்த இரசாயனம் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதென அந்த நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதிபடுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். 

 அவற்றை முழுமையாக நிராகரிப்பதாகவும் இலங்கை தரச்சான்று நிறுவகம் தெரிவித்துள்ளது. எனவே, தரச்சான்று நிறுவகத்தின் பரிசோதனைகள் நிறைவடையும் வரையில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையிடம் உள்ள தேங்காய் எண்ணெயை மீள் ஏற்றுமதி செய்யவும் உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் உள்ளமை உறுதி! Reviewed by Author on March 29, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.