இரண்டு கனரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!
இவ்விபத்துச் சம்பவம் இன்று (27) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதில் பயணம் செய்த லொறியின் சாரதியொருவரும், கொள்கலனில் பயணித்த சாரதியும் அதன் உதவியாளரும் படுகாயமடைந்த நிலையில் ஹபரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலையிலிருந்து ரத்மலானை பகுதிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற கொள்கலனும், குருணாகலையிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற லொறியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இரண்டு கனரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!
Reviewed by Author
on
March 27, 2021
Rating:

No comments:
Post a Comment