அண்மைய செய்திகள்

recent
-

விபத்தில் 22 வயதுடைய இளைஞன் பலி

கித்துல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கித்துல்கல பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் களுகொவுத்தென் கம்பி பாலத்திற்கு அருகில் இவ்விபத்து 04.04.2021 அன்று காலை இடம்பெற்றுள்ளது. டயகம பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளும், எட்டியாந்தோட்டை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற கனரக வாகனம் ஒன்றும் நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இவ்விபத்தில் மோட்டர் சைக்களின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டர் சைக்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே வாகன இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. எனினும் கனரக வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாக கித்துல்கல பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் டயகம முதலாம் பிரிவைச் சேர்ந்த அதிர்ஷ்டநாதன் கோபிநாதன் (வயது - 22) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

 இவ்விபத்தினால் சில மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது. உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கித்துல்கல வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை கித்துல்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் 22 வயதுடைய இளைஞன் பலி Reviewed by Author on April 04, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.