அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை போக்குவரத்து சபை மன்னார் சாலையின் பொறுப்பற்ற நடத்தையினால் இன்று (04) பாதிக்கப்பட்ட கிழக்கு பல்கலை இறுதி வருட மாணஅதிககள் மற்றும் அரசாங்க அதிபருக்கு எழுதிக் கொள்வது...

இலங்கை போக்குவரத்து சபை #மன்னார் #சாலையின் பொறுப்பற்ற நடத்தையினால் இன்றய 04.04.2021 நாளில் பாதிக்கப்பட்ட கிழக்கு பல்கலை இறுதி வருட மாணவர்கள் குறித்த அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிபருக்கு எழுதிக் கொள்வது... கிழக்கு பல்கலை கழக இறுதி வருட மாணவர்களின் இறுதி பரீட்சைக்காக 04.04.2021 இன்று விடுதிகளுக்கு சமூகமளிக்குமாறு ஏற்கனவே பல்கலை நிர்வாகத்தினால் அறிவுறுத்தப்பட்டிருந்ததது. இதற்காக சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது

அதில் முக்கியமானது மூன்று தினங்களுக்குட்பட்ட PCR அறிக்கையுடன் விடுதிகளுக்கு வருகைதர வேண்டுமென்பது. அவ்வாறான PCR அறிக்கை இன்றி வருபவர்களுக்கு விடுதி வழங்கப்பட மாட்டாதென்பது குறிப்பிடக்கூடிய விடயமாகும். இந்த நிலையில் குறித்த தினமான இன்றய தினம், 03.04.2021 அன்று பெற்றுக் கொள்ளப்பட்ட PCR அறிக்கைகளுடன் காலை 6.30 மணி பேருந்தினை எதிர்பார்த்து தரிப்பிடத்திற்கு சென்ற மற்றும் பேருந்திற்காக காத்திருந்த முப்பதிற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரே பதில் #Bus #Breakdown.  

எந்த வகையில் இது ஏற்றுக் கொள்ளக்கூடிய பதிலாகும்? மன்னார் சாலையில் அந்த ஒரு பேருந்துதான் உள்ளதா? என்ற கேள்வி கேட்கப்பட்ட பொழுது கிடைத்த உத்தியோகப்பற்றற்ற பதில் இன்று #ஈஸ்டர் என்பதால் ஊழியர்கள் விடுமுறை. அப்படியாயின் மன்னார் சாலையில் கடமையாற்றும் அனைவரும் கிறிஸ்தவர்களா?? நிச்சயமாக இல்லை. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.. கிழக்கிற்கு செல்லும் ஒரேயொரு பேருந்து அதுதான். இரண்டு மாதங்கள் பரீட்சையை எதிர்நோக்கி செல்லும் எங்களின் இறுதி பயணத்தில் நாங்கள் எத்தனை உடைமைகளுடன் காத்திருந்திருப்போம்? திடீரென்று காலையில் இப்படியான செய்தி கிடைத்தால் #வவுனியாவோ #அனுராதபுரமோ சென்று உடைமைகளுடன் நெரிசல்களுக்குள் இருக்கைகளும் கிடைக்காமல் பெண் பிள்ளைகள் எவ்வளவு அசௌகரியங்களை சந்திக்க வேண்டியிருக்கும்? அதுவும் இந்த கொரோனா நிலவரத்தில் வெளி மாவட்ட பஸ்களில் எப்படி நம்பிக்கையுடன் பயணிக்க முடியும்? இந்நிலையில் 500/- ரூபாயுடன் மன்னாரிலிருந்து பல்கலை சென்றடையும் நாம் தனி வாகனங்கள் பிடித்து நபருக்கு 2000/- ரூபாய்கள் வரை செலவு செய்துள்ளோம். 

 எத்தனையோ குடும்ப கஸ்டங்கள் மத்தில் கல்வி கற்கும் எமக்கு இந்த பணத்தை தயார் செய்வதுகூட பெரிய சிரமமாக அமைந்தது. இன்று விடுதிகளில் சேராவிடில் வாடகைக்கு வீடுகள் எடுத்து தங்க வேண்டும். அந்தளவு செலுவு செய்வதற்கு எம்மில் பல மாணவர்களின் குடும்ப பொருளாதாரமும் இல்லை. எனவே நாம் குறித்த விடயம் தொடர்பான அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிபரிடம் வினயமாக கேட்டுக் கொள்வது...

 1)குறித்த நிகழ்வு தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்.. 

 2)இனிமேலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இலங்கை போக்குவரத்து சபை மன்னார் சாலையின் பொறுப்பற்ற நடத்தையினால் இன்று (04) பாதிக்கப்பட்ட கிழக்கு பல்கலை இறுதி வருட மாணஅதிககள் மற்றும் அரசாங்க அதிபருக்கு எழுதிக் கொள்வது... Reviewed by Author on April 04, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.