அண்மைய செய்திகள்

recent
-

மத நல்லிணக்கத்தின் மறு வடிவமே மறைந்த ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை- நானாட்டான் சிறி செல்வமுத்து மாரியம்மன் ஆலய நிர்வாகம் இரங்கல்.

மறைந்த ஆயர் அவர்கள் மதத்திற்காக குரல் கொடுத்ததை விட மனித நேயத்திற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் குரல் கொடுத்த செயற்பாடுகளே இங்கு அதிகம்.ஆயர் அவர்கள் இறைபாதம் அடைந்த செய்தி நானாட்டான் பிரதேச சைவ மக்கள் அனைவரையும் மிகவும் பாதித்துள்ளது என நானாட்டான் சிறி செல்வமுத்து மாரியம்மன் ஆலய நிர்வாகம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. -குறித்த இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,,,, இலங்கையில் மூன்று தசாப்த காலமாக நடை பெற்ற யுத்த காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மன்னார் மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்து வந்த நிலையில் அந்த மக்களை இன மத பேதம் இன்றி மனித நேயத்தோடு அவர்களுக்கு தேவையான உதவிகளை வெளி நாடுகளில் இருந்து பெற்றுக் கொடுத்தார். 

 மன்னார் மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள மூன்று மதங்களையும் அனுசரித்து மனித நேயத்தோடு வழி நடத்திய நல்லதொரு தலைமை பண்பாளர் மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் தேகு கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள். மறைந்த ஆயர் அவர்கள் மதத்திற்காக குரல் கொடுத்ததை விட மனித நேயத்திற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் குரல் கொடுத்த செயற்பாடுகளே இங்கு அதிகம். ஆயர் அவர்கள் இறைபாதம் அடைந்த செய்தி நானாட்டான் பிரதேச சைவ மக்கள் அனைவரையும் மிகவும் பாதித்துள்ளது. மத நல்லிணக்கத்தின் உண்மையான வடிவமாக செயற்பட்ட இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் செய்த பணியை மக்கள் மறந்து விட முடியாது. அவரின் பிரிவு என்பது மன்னார் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. 

மன்னார் மாவட்டத்தில் உள்ள சைவ மக்களின் மனங்களையும் மிகவும் பாதித்துள்ளது. இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் மதம் கடந்த மனித நேயம் கொள்கையை நாம் அனைவரும் பின் பற்றி நடக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் நானாட்டான் பிரதேச சைவ மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்வதோடு எமது மக்களின் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து நிற்கின்றோம்.என நானாட்டான் சிறி செல்வ முத்து மாரியம்மன் ஆலய நிர்வாகத்தினர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

மத நல்லிணக்கத்தின் மறு வடிவமே மறைந்த ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை- நானாட்டான் சிறி செல்வமுத்து மாரியம்மன் ஆலய நிர்வாகம் இரங்கல். Reviewed by Author on April 03, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.