உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் இந்த ஈஸ்டர் தினத்தில் அவர்களை விசேடமாக நினைவு கூறுவோம்
நாங்கள் இந்த உயிர்த்த ஞாயிறு அன்று இதற்கு முன்பாக இரண்டு வருடங்களுக்கு முன்பு பாஸ்கா திருவிழா அன்று திருப்பலிக்காக சென்றிருந்த எத்தனையோ மக்கள் குண்டுவெடிப்பு காரணமாக தங்களது உயிரை இழந்தார்கள் அவர்களை இன்றைய தினம் நாம் விசேடமாக நினைவு கூறுவோம்
அவர்களுக்கு உண்மையான ஒரு நீதியும் உண்மையான தீர்ப்பும் கிடைக்க பெற வேண்டும் என்று நாம் இறைவனிடம் மன்றாடுவோம்
அத்தோடு இன்றைய கால கட்டத்தில் இந்த கொரோனா நோயால் நாங்கள் மிகவும் அச்சுறுத்தப்பட்டு வாழுகின்றோம் இப்பிடியான நேரங்களில் நாங்கள் சில நேரம் தேவலயத்திற்கு சென்று திருப்பலியில் கலந்து கொள்ள முடியாத நிலை கூட காணப்படலாம் இருந்தாலும் நாம் வீடுகளிலேயே இருந்து இந்த உயிர்த்த ஜேசுவை மகிழ்சியாக கொண்டாடுவோம் .
உயிர்த்த ஜேசு நமக்கு வெற்றிப்பெற்று தருவார் என்ற நம்பிக்கையுடன் எமது வாழ்கையை சிறப்பாக கொண்டு செல்வோம் எனவும் இந்த உயிர்ப்பு விழா உங்களிலும் உங்கள் குடும்பங்களிலும் புத்துணர்சியையும் புதுவாழ்வையும் தரவேண்டும் நீங்கள் புத்துயிர் பெற்றவர்களாக இந்த உயிர்த்த ஜேசுவின் மக்களாக நாங்களுக்கு ஆசிப்பதாகவும் ஆயர் கலாநிதி லயனல் இம்மானுவெல் பெர்னாண்டோ தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் இந்த ஈஸ்டர் தினத்தில் அவர்களை விசேடமாக நினைவு கூறுவோம்
Reviewed by Author
on
April 04, 2021
Rating:

No comments:
Post a Comment