உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்கு ஈடுசெய்ய முடியாத மாபெரும் இழப்பாகும் VISION6
முன்னைநாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் மறைவு மன்னார் மாவட்டத்திற்கு மாத்திரமல்லாது உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்கு ஈடுசெய்ய முடியாத மாபெரும் இழப்பாகும்.
சமய வேறு பாடுகளுக்கு அப்பால் தன்னினம் ஒற்றுமையாகவும், சகோதரத்துவத்துடனும் வாழவேண்டும் என்பதற்காக அயராது பாடுபட்டு அதை தான் வாழ்ந்த காலப்பகுதியில் நடத்தியும் காட்டியவர். போர்கால சூழ்நிலையில் மக்களின் பிரச்சனையாக உருவெடுத்த கைதுகள், ஆள்கடத்தல் ,உணவு தட்டுபாடு போன்றவற்றுக்கு தனது முதுமையையும் பெருட்படுத்தாது களத்தில் நின்று தன்னால் முடிந்தளவு மக்களுக்கு சேவையாற்றியவர்.
அவரின் கனவாக இருந்த தமிழ் இனத்தின் விடுதலை , தமிழ் மக்களின் ஒற்றுமை என்பது நிறைவேறும் முன்பு இறைவன் அவரை அழைத்துக்கொண்டர் என்பது மிகவும் வேதனை.
இறைவனின் திருவடியில் இளைப்பாற அழைக்கப்பட்ட அதிவணக்கத்திற்குறி ஆயரின் ஆன்மா நித்திய இளைப்பாற ஆண்டவனை பிரார்த்திப்போம்.
" நன்றி"
உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்கு ஈடுசெய்ய முடியாத மாபெரும் இழப்பாகும் VISION6
Reviewed by Author
on
April 01, 2021
Rating:

No comments:
Post a Comment