அண்மைய செய்திகள்

recent
-

இந்திய தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க வந்த 86 நாட்டு படகு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது-கொரோனா பரவல் காரணமாக திருப்பி அனுப்பி வைப்பு.

பாம்பன் பகுதிகளில் இருந்து கடந்த திங்கட்கிழமை மீன் பிடிக்கச் சென்ற 11 நாட்டுப்படகுகளையும் அதில் இருந்த 86 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மீனவர்களிடம் இருந்த மீன்பிடி உபகரணங்களை மட்டும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை 30 மணி நேரத்திற்கு பின் நேற்று செவ்வாய்க்கிழமை (4) இரவு நடுக்கடலில் வைத்து எச்சரித்து திருப்பி அனுப்பினர். தமிழக அரசு மீன்பிடி தடை காலம் அறிவித்துள்ளதால் மீன் பிடி விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் அதிகளவு நாட்டுபடகுகள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று மீன் பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றனர். வந்த 

 இநத் நிலையில் கடந்த திங்கட்கிழமை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் இருந்து சுமார் 11 விசைப்படகுகளில் மீன் பிடிப்பதற்காக டாஸ்மன், பிரவீன், ராஜ், ராமு, நாகராஜ், சிம்சன், சுரேஸ், அந்தோணி, கிருஷ்ணன் உள்ளிட்ட் 86 மீனவர்கள்; மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்பரப்பிற்குள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டதாக கடந்த திங்கள் கிழமை மதியம் நாட்டுப் படகுகளையும் அதில் இருந்து 86 மீனவர்களையும்; சிறைபிடித்து நடுக்கடலில் வைத்து விசாரணை நடத்தினர். 

 பின்னர் மீனவர்களின் படகுகளை சோதனை செய்த கடற்படை வீரர்கள்; படகில் போதைப் பொருட்கள் எதுவும் இல்லாததால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் மீனவர்கள் கைது செய்யாமல் 30 மணி நேரத்திற்கு பின் எச்சரித்து திருப்பி அனுப்பினர். மீனவர்களின் படகுகிள் இருந்த மீன்பிடி சாதனங்களான, ஜி.பி.எஸ், மீன்பிடி வலைகள், நங்கூரம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் மீண்டும் இலங்கைக் கடற்பரப்புக்குள் வந்தால் கைது செய்து சிறையில் அடைப்பதாக எச்சரித்தனர்.

 திருப்பி அனுப்பட்ட மீனவர்கள் நேற்று (4) செவ்வாய்க்கிழமை இரவு கரைக்கு திரும்பிய பின் பாம்பன் துறைமுகத்தில் வைத்து ராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வீடுகளுக்கு அனுப்பிவைத்தனர். மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது காற்றின் வேகம் காரணமாக இலங்கை எல்லைக்குள் சென்றதாகவும் நடுக்கடலில் எங்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் தாங்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை வெட்டி எடுத்துக் கொண்டதாக கரை திரும்பிய மீனவர்கள் குற்றம் சாட்டினார்.








இந்திய தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க வந்த 86 நாட்டு படகு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது-கொரோனா பரவல் காரணமாக திருப்பி அனுப்பி வைப்பு. Reviewed by Author on May 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.