களுத்துறையின் சில பகுதிகளுக்கு மண்சரிவு, வௌ்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
நிலவும் அதிக மழையுடனான வானிலையால் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்தினால் இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குக்குல் கங்க மற்றும் சிறு ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால், புலத்சிங்ஹல, பாலிந்தநுவர, மில்லனிய மற்றும் ஹொரண உள்ளிட்ட பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புலத்சிங்ஹல, பாலிந்தநுவர, அகலவத்த, வலல்லாவிட்ட, இங்கிரிய, மத்துகம மற்றும் தொடங்கொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
இந்த பிரதேச செயலாளர் பிரிவுகளை அண்மித்து காணப்படும் பகுதிகளில் வாழும் மக்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலத்தில் வெடிப்பு ஏற்படுதல், நிலம் தாழிறங்கல் மற்றும் திடீரென ஊற்று உருவாதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அதிகக் கவனம் செலுத்துமாறும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது
மேல், சப்ரகமுக, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
களுத்துறையின் சில பகுதிகளுக்கு மண்சரிவு, வௌ்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
Reviewed by Author
on
May 13, 2021
Rating:
Reviewed by Author
on
May 13, 2021
Rating:


No comments:
Post a Comment