A/L பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்ற மாணவர்கள்!
வௌியான பெறுபேறுகளுக்கு அமைய,
* கணிதப் பிரிவு - தனராஜ் சுந்தர்பவன் (சாவகச்சேரி இந்துக் கல்லூரி )
* கலைப்பிரிவு - சமல்கா செவ்மினி (தெஹிவளை Presbyterian மகளீர் கல்லூரி)
* வணிக பிரிவு - அமன்தி மதநாயக்க ( காலி சங்கமித்தா மகளீர் பாடசாலை)
* பயோசிஸ்டம்ஸ் தொழில்நுட்பம் - சுகிகா சந்தசரா ( ஹொரணை தக்ஷிலா கல்லூரி)
* பொறியியல் தொழில்நுட்பம் - அவிஷ்க சானுக (ஹொரணை தக்ஷிலா கல்லூரி)
ஆகிய மாணவர்கள் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இன்று வௌியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 297 மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
அதன்படி, புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 78 ஆயிரத்து 337 மாணவர்களும் பழைய பாடத் திட்டத்தின் கீழ் 15 ஆயிரத்து 960 மாணவர்களும் பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு க.பொ.த. உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைத்தளத்திற்கு பிரவேசித்து பெற்றுக் கொள்ள முடியும்.
பரீட்சை பெறுபேறுகள் மீள் மதிப்பீட்டிற்காக இணைய வழியின் ஊடாக வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
A/L பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்ற மாணவர்கள்!
Reviewed by Author
on
May 05, 2021
Rating:

No comments:
Post a Comment