முள்ளிவாய்க்கால் முற்றம் தகர்ப்பு; நினைவு கல்லும் காணாமல் ஆக்கப்பட்டது!
இதனை தொடர்ந்து இரவோடு இரவாக அப்பகுதி இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்ததோடு முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் உள்நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே இரவோடு இரவாக நினைவுக்கல் காணாமல் ஆக்கப்பட்டிருந்ததோடு பொது நினைவுத்தூபியும் அடித்து உடைத்தெறியபட்டுள்ளது .
நினைவுக்கல் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதுடன், பொது நினைவுத்தூபியும் உடைக்கப்பட்டுள்ளது.
சுமார் 2000 கிலோவுக்கு அதிகமான எடையை கொண்ட நினைவுக்கல் கனரக வாகனங்களை கொண்டு அகற்றி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மதத்தலைவர்கள் ஒன்றுகூடியிருந்தனர். முள்ளிவாய்க்கால் வாரத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் தலையீட்டில் இரவோடு இரவாக நினைவுத்தூபி உடைக்கப்பட்டமை பெரும் சர்ச்சையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முள்ளிவாய்க்கால் முற்றம் தகர்ப்பு; நினைவு கல்லும் காணாமல் ஆக்கப்பட்டது!
Reviewed by Author
on
May 13, 2021
Rating:

No comments:
Post a Comment