மன்னாரில் பின் தங்கிய கிராமத்தைச் சேர்ந்த மாணிவிகள் இருவர் கலைப்பிரிவில் சாதனை.
மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த நானாட்டான் டிலாசால் கல்லூரி மாணவிகளான ஜெயரத்தினம் ஜெயப்பிரதா கலைப்பிரிவில் 3 A சித்தியை பெற்று மாவட்ட மட்டத்தில் 1 ஆம் இடத்தினையும், இராமநாதன் புஸ்பலீனா கலைப்பிரிவில் 2 A, B பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 4 ஆம் இடத்தையும் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி உள்ளனர்.
குறித்த மாணவிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கும், சவால்களுக்கும் முகம் கொடுத்து மிகவும் தூர பிரதேசமாக இருக்கும் தங்களுடைய கிராமத்திலிருந்து நானாட்டான் பிரதேசத்தில் உள்ள டிலாசால் கல்லூரிக்கு சென்று கல்வி கற்றனர்.
குடும்பத்தில் உள்ள வறுமை ஒரு தடை இல்லை என்று மாவட்ட மட்டத்தில் சிறந்த இடத்தை பெற்று தங்களுடைய கிராமத்திற்கும் கல்வி கற்ற பாடசாலைக்கும் பெருமை தேடி கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
.
.
மன்னாரில் பின் தங்கிய கிராமத்தைச் சேர்ந்த மாணிவிகள் இருவர் கலைப்பிரிவில் சாதனை.
Reviewed by Author
on
May 05, 2021
Rating:

No comments:
Post a Comment