மன்னாரில் இறுதி நேரத்தில் கைவிடப்பட்ட குடிமகன்கள் காத்திருந்தும் கையில் கிடைக்காத சோகம்
இந்நிலையில், மூன்று தினங்கள் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதால் இன்று வியாழக்கிழமை மாலை மன்னாரில் உள்ள மது பானசாலைகளுக்கு முன் அதிகளவிலான மது பிரியர்கள் கூடியிருந்தனர்.
மது விற்பனை நிலையம் அமைந்துள்ள பகுதியில் உள்ள வீதி முழுவதும் மோட்டார் சைக்கில் உற்பட தமது வாகனங்களை நிறுத்தி விட்டு சுகாதார நடை முறைகளை கருத்தில் கொள்ளாது மது பிரியர்கள் மது பான பொருட்களை கொள்வனவு செய்ய முந்தியடித்தனர்.
மதுபானசாலைகளுக்கு முன் பிரதான வீதியில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டதுடன், மாலை 6 மணிக்கு மது பானசாலைகளை மூட முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் காணப்பட்டது.
மது பிரியர்கள் எதிர் வரும் 3 தினங்களுக்கு தேவையான மது பான பொருட்களை கொள்வனவு செய்துச் சென்றுள்ளனர்.
சுகாதார நடை முறைகளை மீறி அதிகளவிலான கூட்டம் காணப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் குறித்த பகுதிக்கு வரவில்லை எனவும்,மாலை 6 மணிக்கு பின்பே குறித்த பகுதிக்கு வந்ததாகவும் தெரிய வருகின்றது.
இதனால் குறித்த பகுதியில் நீண்ட நேரம் சுகாதார நடை முறைகள் பின் பற்றப்படவில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்தள்ளனர்.
மன்னாரில் இறுதி நேரத்தில் கைவிடப்பட்ட குடிமகன்கள் காத்திருந்தும் கையில் கிடைக்காத சோகம்
Reviewed by Author
on
May 13, 2021
Rating:
Reviewed by Author
on
May 13, 2021
Rating:











No comments:
Post a Comment