மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பஸ்-ஓட்டோ கோர விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலி! இருவர் படுகாயம்
படுகாயமடைந்தவர்கள், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விபத்தில் பெரியகல்லாறு பிரதான வீதியை சேர்ந்த ஓட்டோ சாரதியான அழகப்பர் மதிராஜ் (49 வயது) என்பவர் உயிரிழந்ததுடன், அவரது சடலம், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பஸ்ஸின் சாரதி, களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பஸ்-ஓட்டோ கோர விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலி! இருவர் படுகாயம்
Reviewed by Author
on
May 12, 2021
Rating:

No comments:
Post a Comment