தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்
கொழும்பில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக விசேட வைத்தியர் சுதத் சமரவீ மேலும் தெரிவிக்கையில், இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவு ஆகக்கூடிய முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் கூறினார்.
இடைத்தங்கல் முகாம்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான ´அபாயம்´ ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மண்சரிவு முதலானவை தற்போது இடம் பெறுகின்றன.
இதன்போது இடம்பெயரும் மக்கள் தங்கும் இடைத்தங்கல் முகாம்களில் கொரோனா தொற்றுப் பரவல் அபாயம் உண்டு.
இவ்வாறான சந்தர்பங்களில் இவர்கள் மத்தியில் கொரொனா தொற்றாளர் ஒருவர் இருந்தால் அவர் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவும் நிலை உண்டு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய முகாம்களுக்குச் சென்றால் முகக்கவசம் அணிந்திருப்பது மிக முக்கியமானது. அனைவரும் ஒன்று கூடாது குடும்பங்களாக தனித்தனியாக இடைவெளியை முன்னெடுத்து இருப்பது மிக முக்கியமானது என்று தெரிவித்தார்.
அத்தோடு முகாமிலுள்ள மக்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்
Reviewed by Author
on
May 16, 2021
Rating:
Reviewed by Author
on
May 16, 2021
Rating:


No comments:
Post a Comment