டெல்டா பிறழ்வு உள்ளவர்களுக்கு நோய் அறிகுறி இன்றி மாரடைப்பு-இதயநோய் பிரிவு விசேட நிபுணர் எச்சரிக்கை
பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு எவ்வித கொரோனா நோய் அறிகுறிகளும் காணப்படவில்லை எனவும் ஆனால் இதயம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அவர் கூறினார்.
கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை காலத்தில் இவ்வாறானதொரு நிலைமையை காண முடியவில்லை என அவர் கூறினார்.
எனவே இது மூன்றாவது அலையில் டெல்டா பிறழ்வின் மூலமே ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையினால் இளம் வயதுடைய மற்றும் மத்திய வயதுடைய நபர்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்தார்.
அதனால் கொலஸ்ரால், அதிக இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் காணப்படும் நபர்களுக்கு இருதய வலி, மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் அதற்கு சிகிச்சை அளிக்க விசேட வைத்திய குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டெல்டா பிறழ்வு உள்ளவர்களுக்கு நோய் அறிகுறி இன்றி மாரடைப்பு-இதயநோய் பிரிவு விசேட நிபுணர் எச்சரிக்கை
Reviewed by Author
on
August 30, 2021
Rating:

No comments:
Post a Comment