முல்லைத்தீவின் சிறந்த உடற்கல்விமான் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு!
விளையாட்டுத்துறை சார்ந்த வளர்ச்சியுடன் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காகவும் அளப்பெரிய பங்காற்றியதுடன் பலர் இத்துறையில் அரச வேலைவாய்ப்பை பெற வழிகாட்டியாக திகழ்ந்ததுடன், சிறந்த மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்தி உருவாக்கிய பெருமைக்குரியவர்.
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி, முள்ளியவளை வித்தியானந்த கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராக கடமையாற்றிய இவர் அங்கு விளையாட்டு துறையை மேம்படுத்த காரண கர்த்தாவாகவும், அதனூடாக பல கழங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க வித்திட்டவர்.
நாட்டிலும் மாவட்டத்திலும் பலவிதங்களில் சிறந்த உதைபந்தாட்ட நடுவராக பணியாற்றி தனது நடுநிலைத்தன்மையை வெளிப்படுத்தியவர்.
முல்லைத்தீவு கல்வி வலயத்தில் நீண்ட காலமாக உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி பல மாணவர்கள் தேசிய மட்ட சாதனைகளை அடைய வழிகாட்டியவர்.
இளைஞர்களை விளையாட்டில் ஈர்த்துக் கொள்வதில் பெரும் ஆர்வமுடைய இவர் முல்லைத்தீவு மாவட்ட செயலக மூத்த விளையாட்டு வீர்ர் விருது, மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் வடமாகாண மாவட்டத்தின் சிறந்த மூத்த விளையாட்டு விருது போன்றதான விருதுகள் பல பெற்றவராவார்.
பலரது மனங்களில் நீங்கா இடம்பெற்ற மைக்கல் திலகராஜா அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முல்லைத்தீவின் சிறந்த உடற்கல்விமான் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு!
Reviewed by Author
on
September 13, 2021
Rating:

No comments:
Post a Comment