அண்மைய செய்திகள்

recent
-

துண்டாடப்பட்டவரின் கையை பொருத்தி யாழ். போதனா வைத்தியசாலையில் சாதனை!

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் தவறி விழுந்து படகின் காற்றாடியில் சிக்கி கையை இழந்தவருக்கு அதனை வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர் யாழ். போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள். குறித்த சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திர சகிச்சை நிபுணர் வைத்தியர் இளம்செழிய பல்லவன் மேற்கொண்டுள்ளார். 

பருத்தித்துறையில் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மன்னாரைச் சேர்ந்த மீனவன் தவறுதலாக கடலில் விழுந்த நிலையில் அவரது வலது கை வலது கால் வள்ளத்தின் காற்றாடியின் சிக்குண்டு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிதைந்தது. இந் நிலையில் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பிளாஸ்திக் சத்திரசிகிச்சை நிபுணர் இளம் செழிய பல்லவன் தலைமையிலான குழுவினர் அதனை வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மூலம் பொருத்தியுள்ளனர். குறித்த சத்திர சிகிச்சையானது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சுமார் 5 மணித்தியாலங்கள் இடம் பெற்று வெற்றி கண்டமை குறிப்பிடத்தக்கது.


துண்டாடப்பட்டவரின் கையை பொருத்தி யாழ். போதனா வைத்தியசாலையில் சாதனை! Reviewed by Author on September 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.