அண்மைய செய்திகள்

recent
-

யாழ். பல்கலைக் கழகத்தில் தடைகளையும் மீறி ஒளிவீசிய கார்த்திகை தீபம்

யாழ். பல்கலைக் கழகத்தில் தடைகளையும் மீறி மாணவர்களால் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்கீடான இன்று பல்வேறு தடைகளையும் தாண்டி யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் தீபம் ஏற்றி கொண்டாடப்பட்டது. இன்று மாலை 6 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு கார்த்திகை விளக்கீட்டினை கொண்டாடுவதற்கு சென்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியொகத்தர்களால் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. 

இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் ஆன்மீகரீதியான செயற்பாடுகளை மேற்க் கொள்ளவும் தடை விதிப்பதா என மாணவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு பல்கலைக்கழகத்திற்குள் சென்று கார்த்திகை விளக்கீட்டு தீபங்களை ஏற்றியுள்ளனர். கடந்த வருடம் கார்த்திகை தீபம் ஏற்றியதற்காக யாழ் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலைக் கழகத்தில் தடைகளையும் மீறி ஒளிவீசிய கார்த்திகை தீபம் Reviewed by Author on November 18, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.