முன்பள்ளி ஆசிரியர்கள் ஆற்றி வருகின்ற பணி மன்னார் மறை மாவட்டத்திற்கு பாரிய பங்கினை வகிக்கின்றது.
மன்னார் மறைமாவட்ட விசேட திட்டங்கள் மற்றும் இளைஞர் ஆணைக்குழு இயக்குனருமான அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.
-இதன் போது மன்னார் மறைமாவட்ட பராமரிப்பில் உள்ள 171 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மன்னார் மறைமாவட்ட ஆயரினால் விசேட உதவி திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
-அதனைத் தொடர்ந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,.
முன்பள்ளி ஆசிரியர்களாகிய நீங்கள் ஆற்றி வருகின்ற பணி மன்னார் மறை மாவட்டத்திற்கு பாரிய பங்கினை வகிக்கின்றது.முன் பள்ளி என கூறும் போது கல்வியை ஆரம்பிக்கும் ஓர் அடித்தளமாகும்.
-மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதற்கு முன்பாக தமது ஆரம்பக் கற்றலை கற்றுக் கொடுக்கும் அந்த கால கட்டத்தில் முன் பள்ளி ஆசிரியர்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள்.
முன்பள்ளி ஆசிரியர்களாகிய நீங்கள் மாணவர்களின் உருவாக்கத்திற்கு பாரிய பங்களிப்பு செய்கின்றீர்கள்.
-எனவே உங்கள் சேவையை பாராட்டுகிறேன்.கொரோனா தொற்று காரணமாக முன் பள்ளியை நடத்த முடியாத நிலையில் ஆசிரியர்களாகிய நீங்கள் பல்வேறு இடையூரை சந்தித்துள்ளீர்கள்.
-அவ்வாறான சந்தர்ப்பத்திலும் சில ஆசிரியர்கள் மாணவர்களை தனியாக அழைத்து அவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளீர்கள். உங்கள் முயற்சிகளை நாங்கள் ஏற்று பாராட்டுகின்றோம்.என அவர் தெரிவித்தார்.
முன்பள்ளி ஆசிரியர்கள் ஆற்றி வருகின்ற பணி மன்னார் மறை மாவட்டத்திற்கு பாரிய பங்கினை வகிக்கின்றது.
Reviewed by Author
on
December 15, 2021
Rating:
Reviewed by Author
on
December 15, 2021
Rating:

No comments:
Post a Comment