சுகாதார தொழிற்சங்கங்கள் காலவரையறை அற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று முன்னெடுப்பு!
மத்திய மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் 24 மணித்தியால வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகிறது.
அரசாங்கத்தால் இன்னும் தீர்க்கப்படாத ஏழு கோரிக்கை களை முன்வைத்து சுகாதார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக கூட்டமைப்பின் தலைவரான ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சு, நிதி அமைச்சர் மற்றும் அரசாங்கத்தின் கவனத்துக்கு ஏழு கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் தலையிட்டு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வழங்கத் தவறியதால் கூட்டமைப்பு இரண்டாம் கட்ட தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு கூட்டமைப்பின் தலைவர் தமது கவலைகளைத் தெரிவித்ததுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையை முன்னெடுக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
சுகாதார தொழிற்சங்கங்கள் காலவரையறை அற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று முன்னெடுப்பு!
Reviewed by Author
on
December 08, 2021
Rating:
No comments:
Post a Comment