எமது உயிர் எமக்கானது மட்டுமல்ல! முல்லைத்தீவுக் கடலுக்கு இரையாகம் உயிர்கள்!
கூடுதலாக வவுனியாவில் இருந்து கரையோரப்பிரதேசங்களை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் தான். கடந்த வருடமும் இரண்டு தடவைகள் ஜந்து பேருக்கு மேல் நாயாறு மற்றும் முல்லைத்தீவுக் கடலில் மூழ்கி இறந்திருந்தனர்.
ஒக்டோபர், நவம்பர், டிசெம்பர் மாதங்களில் கடலில் இறங்குவதை முற்றுமுழுதாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.. நண்பர்களுடன் சேர்ந்த போதைவஸ்த்து பயன்படுத்திய பின் கடலில் இறங்குவது முட்டாள் தனம்..! கடல் கரையோரங்களில் குறிப்பாக சில இடங்களில் அபாய எச்சரிக்கைப் பலகைகள் நாட்டப்பட்டுள்ளது. தயவு செய்து அதை உதாசினப்படுத்தாதீர்கள்.
மாரி காலம் கடல் குழப்பமாக உள்ள காலம்.
இந்தக் காலத்தில் நீங்கள் கடலில் குளிக்க முயன்றால் நீங்கள் கடலுக்கு இரையாவது நிச்சயம்..
நாம் அனைவரும் உணரவேண்டிய ஒரு விடயம், எமது உயிர் எமக்கானது மட்டுமல்ல எமை சார்ந்துள்ளவர்களுக்குமானது. கனவுகளோடு ஒரு குழந்தையைப் பெற்றேடுத்து பல கஷ்டங்கள் கடந்து ஒரு ஆள் ஆக்கிய உங்கள் தாய், தகப்பனுக்கு நீங்கள் செய்தது என்ன ! அவர்களுக்கு நீங்கள் கூட இருப்பதே மிகப்பெரிய பலம்..! ஏமாற்றிவிடாதீர்கள் !
வீடு செல்லும் வரை காத்திருக்கும்
உங்கள் துணைவி, உங்கள் குழந்தைகளின் நாளைய நிலை என்ன..! நாளை அவர்களுக்கு துணையார் !
தயவு செய்து அவதானமாக நடந்து கொள்ளுங்கள் நண்பர்களே..!
எமது உயிர் எமக்கானது மட்டுமல்ல! முல்லைத்தீவுக் கடலுக்கு இரையாகம் உயிர்கள்!
Reviewed by Author
on
December 07, 2021
Rating:
No comments:
Post a Comment