மக்களின் எதிர்ப்பால் பாராளுமன்றத்தின் பின்புறமாக வௌியேறிய பாராளுமன்ற உறுப்பினர்கள்
குறித்த பகுதியூடாக வீடு திரும்பும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்காக மக்கள் காத்திருந்தனர்.
எனினும், பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் பின்புறமாக புறப்பட்டுச்சென்றதாக தகவல் வௌியானது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, மக்களுக்கு பதிலளித்து பாராளுமன்றத்தின் பின்னால் உள்ள வீதியூடாக வௌியேறினார்.
பின்புறமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌியேறிச் செல்வதை அறிந்துகொண்ட மக்கள் அந்த இடத்தில் கூடி எதிர்ப்பை வௌிப்படுத்தினர்.
இதேவேளை, இன்று பிற்பகல் இராணுவத்தினரும் குறித்த இடத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பாராளுமன்றத்தின் சில அதிகாரிகளும் பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து வௌியேறினர்
.
.
மக்களின் எதிர்ப்பால் பாராளுமன்றத்தின் பின்புறமாக வௌியேறிய பாராளுமன்ற உறுப்பினர்கள்
Reviewed by Author
on
April 05, 2022
Rating:
Reviewed by Author
on
April 05, 2022
Rating:


No comments:
Post a Comment