அண்மைய செய்திகள்

recent
-

பதவி விலகினார் லிட்ரோ காஸ் தலைவர்

லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தேசரஜெயசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதிக்கு அவர் தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். லிட்ரோ காஸ் நிறுவனத்தில் ஊழல் முடிவிற்கு கொண்டுவரப்படுவதை உறுதி செய்வதற்காக எடுத்த நடவடிக்கைகளை அவர் வர்ணித்துள்ளார். தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி ஆதரவை வழங்கியபோதிலும் உரிய அமைச்சரோ நிதித்துறை அதிகாரிகளோ உரிய ஆதரவை வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

அரசாங்கத்தின் நாடாளுமன்ற பலர் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு உதவாமல் மாறாக பிழையான அறிக்கைகளை வெளியிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். இந்த குறுகிய இலாபம் மீட்டும் அரசியல் கலாச்சாரம் லிட்ரோ நிறுவனத்தில் மாத்திரம்காணப்படும் விடயமல்ல மாறாக அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறான சூழலில் தொடர்ந்தும் என்னால் பணியாற்ற முடியாது என தெரிவித்துள்ள தேசரஜெயசிங்க 14 ம் திகதி முதல் தனது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். 

எரிவாயு விநியோகம் குறித்த கரிசனைகளிற்கு வெறுமனே உள்ளகரீதியில் மாத்திரம் தீர்வை காணமுடியாது இந்த நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு அனைத்து பொருளாதார துறையினரும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை நாணயத்தின் வீழ்ச்சி- இறக்குமதிக்கான போதிய டொலர் இன்மை-தனியார் அரசவங்கிகளிற்குள்காணப்படும் பிரச்சினைகள்- சர்வதேச நிதி அமைப்புகளின் எதிர்வு கூறல் என அனைத்தும் காஸ் தொழில்துறை மீது நெருக்கடியை திணித்துள்ளன லிட்ரோவால் அந்த கரிசனைகளிற்கு தீர்வை காணமுடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.




பதவி விலகினார் லிட்ரோ காஸ் தலைவர் Reviewed by Author on April 15, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.