மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக மன்/புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின் பழைய மாணவர்களால் நம்பிக்கை நிதியம் ஆரம்பித்து வைப்பு
அவுஸ்ரேலியாவில் நீண்டகாலமாக செயற்படும் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அவுஸ்ரேலிய கிளையின் ஏற்பாட்டில் அவர்களின் நிதி அனுசரணையில் வறுமையின் காரணமாக கல்வி நடவடிக்கைகளில் இடர்படும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு குறித்த நம்பிக்கை நிதியம் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது
குறித்த நிகழ்வில் மன்னார் வலய கல்விப்பணிப்பாளர், அவுஸ்ரேலிய பழையமாணவர் சங்க கிளையில் நிர்வாக உறுப்பினர்கள்,பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
குறித்த நம்பிக்கை நிதியத்தின் ஊடாக 6 மில்லியன் ரூபா நிதி உதவி பாடசாலை ஊடாக வறிய மாணவர்களுக்கு என முதல்கட்டமாக முதலிடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக மன்/புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின் பழைய மாணவர்களால் நம்பிக்கை நிதியம் ஆரம்பித்து வைப்பு
Reviewed by Author
on
April 06, 2022
Rating:

No comments:
Post a Comment