முள்ளிவாய்கால் வளாகத்தில் தகர பந்தல் அமைக்க முல்லைத்தீவு பொலீசார் தடை!
முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் இனப்படுகொலைக்கு நீதிகோரி அம்பாறையில் இருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்தும் முள்ளிவாய்க்கால் நோக்கி போரணிகள் புறப்பட்டுள்ள நிலையில்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவு நிகழ்விற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் 16.05.2022 இன்று மாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பந்தல் அமைப்பதற்காக ஏற்பாட்டுக்குழுவினால் பந்தல் கொண்டுவந்து இறக்கப்பட்ட போது அதற்கு பொலீசார் தடைவித்துள்ளார்கள்.
பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த முல்லைத்தீவு பொலீசார் தகரபந்தலினை அகற்றுமாறும் காணிதொடர்பிலும் உரிய அனுமதிகளை பெற்று பந்தல் அமைக்கும் பணிகளை முன்னெடுக்குமாறும் தெரிவித்துள்ளதை தொடர்ந்து பந்தல் அகற்றப்பட்டுள்ளதுடன் கொடிகளை கட்டி ஏனைய சிரமதான பணிகளை முன்னெடுக்கும் நடவடிக்கையிலும் ஏற்பாட்டு குழு ஈடுபட்டுள்ளது
முள்ளிவாய்கால் வளாகத்தில் தகர பந்தல் அமைக்க முல்லைத்தீவு பொலீசார் தடை!
Reviewed by Author
on
May 16, 2022
Rating:
Reviewed by Author
on
May 16, 2022
Rating:




No comments:
Post a Comment