மன்னார் நீதி மன்றத்தினால் மணல் அகழ்வுக்கு எதிராக வழங்கப்பட்ட கட்டளையை நடைமுறைப்படுத்தாத பொலிஸார். -ஆத்திமோட்டை சிவில் அமைப்புக்கள் குற்றச்சாட்டு
மன்னார் நீதி மன்றத்தால் முறையற்ற அனுமதியின்றி மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆத்திமோட்டை பகுதியில் இடம் பெற்று வந்த மணல் அகழ்வை உடனடியாக நிறுத்துமாறு கடந்த இரண்டாம் திகதி (02-06-2022) கட்டளையிட பட்டிருந்தது.
ஆனால் இதுவரை குறித்த கட்டளை இலுப்பைக்கடவை பொலிஸாரினால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என வழக்கு தொடர்ந்த ஆத்திமோட்டை சிவில் அமைப்புக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிசார் சட்ட விரோதிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சாமானியனின் கடைசி நம்பிக்கையாகிய நீதிமன்றத்தையும் நம்பிக்கை இழக்க வைக்கும் செயலில் போலீசார் ஈடுபடுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
(மன்னார் நிருபர்)
(07-06-2022)

No comments:
Post a Comment