பொருளாதார நெருக்கடியால் மன்னாரில் மட்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
அதனால் தூர பிரதேசங்களுக்கு பொருட்களைக் கொண்டு சென்று கொடுத்தால் செலவு இரட்டிப்பாகிறது.
உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் யாவும் தேங்கி கிடப்பதாகவும் தெரிவிக்கின்றார்கள்.
எனவே இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட்டு எரிபொருட்கள் உட்பட அனைத்து பொருட்களும் தடையில்லாமல் விலை குறைவாக கிடைத்தால் மட்டுமே எமது பாரம்பரிய தொழிலை தொடர்ச்சியாக செய்ய முடியும் .
மேலும் பலர் இந்த தொழிலில் இருந்து விலகி வேறு தொழிலுக்குச் சென்றுள்ளார்கள். தங்களது காலத்தின் பின்பு தமிழர்களின் பாரம்பரிய தொழிலாக காணப்படும் இந்த மண்பாண்ட தொழிலை தொடர்ந்து செய்வதற்கு ஆட்கள் இல்லை.
காலப்போக்கில் மன்னார் மாவட்டத்தில் இந்த மட்பாண்ட தொழில் அழிந்து போகக் கூடும் என மட்பாண்ட தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியால் மன்னாரில் மட்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
Reviewed by Author
on
June 09, 2022
Rating:

No comments:
Post a Comment