முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையில் திருத்தம்
பொதியிடல் தொடர்பான தீர்மானங்கள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் ஊடாகத் தேவையான பரிசீலனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், வெள்ளை மற்றும் சிவப்பு நிற முட்டைகளுக்கு தனித்தனியாக 50 ரூபாவாக விலையை உயர்த்த வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இணங்கியுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அண்மையில் அமைச்சருடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் தெரிவித்திருந்தது.
எனினும், நுகர்வோர் அதிகாரசபை அண்மையில் வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும் சிவப்பு நிற முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயித்திருந்த நிலையில், அதில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்தது.
இதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது சந்தையில் முட்டைக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது. எவ்வாறாயினும், இன்று முதல் முட்டைகளை தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
50 ரூபாவிற்கும் குறைவான விலையில் முட்டைகளை விற்பனை செய்ய விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் ஏற்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையில் திருத்தம்
Reviewed by Author
on
August 29, 2022
Rating:
Reviewed by Author
on
August 29, 2022
Rating:


No comments:
Post a Comment