மீண்டும் தூசி தட்டப்படவுள்ள மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு மற்றும் திருக்கேதீச்சரம் மனித புதைகுழி வழக்கு
இந்த புதை குழியிலிருந்து ஏற்கனவே எடுத்துச் செல்லப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் மீண்டும் மன்னார் நீதவான் முன்னிலையில் கொண்டு வந்து அமெரிக்கா ஃப்ளோரிடா நிறுவனத்திற்கு பரிசோதனைக்கு அனுப்புவதற்கான மாதிரிகளை தெரிவு செய்வதற்காக
இந்த நிலையில் வழக்கு தொடுனர் தரப்பான அரசு தரப்பு இன்று நீதிமன்றத்திற்கு வருகை தந்து வைத்தியர்களான கேவகே மற்றும் வைத்திய ரெட்ண அவர்களினால் இந்த மாதிரிகளை மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கொண்டு வந்து ஆய்வு செய்வதாக இருந்தால் பல வருடங்கள் பழமை வாய்ந்த இந்த மாதிரிகளை இங்கு கொண்டு வந்து மீண்டும் கொழும்புக்கு கொண்டு செல்லும்போது இந்த அகழ்வு பொருட்கள் இந்த வழக்கு பொருட்கள் சேதமாகும் பாதிக்கப்படும் என்ற அடிப்படையில் தாங்கள் அதனை அனுராதபுர நீதவான் முன்னிலையில் பிரித்தெடுத்தலை செய்வதற்கான கட்டளை ஒன்றை வழங்குமாறு கேட்டு இருந்தார்கள்
அதற்கு வழக்கு தொடுநர் தரப்பில் நாங்கள் கடுமையான ஆட்சேபனையையும் எதிர்ப்பையும் தெரிவித்து இருந்தோம்
இந்த நிலையில் மன்னார் நீதவான் அனுராதாபுரம் நீதிமன்றத்தின் சென்று அகழ்வு எடுக்கப்பட்ட மனித எச்சங்களை பிரித்து எடுப்பதற்கு தனக்கு நியாயதிக்கம் இல்லை எனவும்
மன்னார் நீதவான் நீதிமன்ற எல்லைக்குள் அது நடைபெற வேண்டும் என்று அவ்வாறு செய்வதற்கு வழக்கு தொடுனர் தரப்பு வைத்தியர்களுக்கு அசெளகரியங்கள் இருக்குமானால் அதற்கான நடவடிக்கை எடுத்து அனுராதபுரம் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் அந்த பிரித்தெடுத்தல் நடவடிக்கையை மேற்கொள்ளாம் என்று மீண்டும் ஒரு கட்டளை ஆக்கப்பட்டிருக்கின்றது
இந்த வழக்கானது நவம்பர் மாதம் 24 ஆம் தேதி மீண்டும் மேலதிக நடவடிக்கைக்காக அழைக்கப்பட உள்ளது
அதே நேரம்
மன்னார் சதோச மனித புதைக்குழி வழக்கும் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது
ஏற்கனவே வைத்தியர் ராஜபக்ஷ அவர்களுக்கு அழைப்பாணை ஒன்று வழங்கப்பட்டிருந்தது நீதிமன்றத்திற்கு தோன்றுவதற்கு ஆனாலும் அவர் இன்று சமூகம் அளிக்கவில்லை அதை தொடர்ந்து இன்று மன்னர் பொலிஸார் நீதிமன்றத்திற்கு வருகை தந்து வைத்தியர்கள் இன்று நீதி மன்றத்திக்கு தோன்றுவதில் அசெளகரியங்கள் இருப்பதாகவும் தனக்கு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி நீதிமன்றத்திற்கு ஆஜராக முடியும் எனவும் கூறியிருந்தனர்
அதேநேரம் புளோரிடா நிறுவனத்திடம் இருந்து வந்த அறிக்கை ஒன்று இன்று தபால் மூலம் மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது நாங்கள் அதற்கான அத்தாட்சிபடுத்தப்பட்ட பிரதியை எடுத்து பார்க்க வேண்டியிருக்கின்றது எனவும் அது ஏற்கனவே வைத்தியரால் நீதிமன்றத்தில் கோப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த அடிப்படையில் இந்த வழக்கானது மீண்டும் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி மேலதிக நடவடிக்கைகளுக்காக திகதியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
மீண்டும் தூசி தட்டப்படவுள்ள மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு மற்றும் திருக்கேதீச்சரம் மனித புதைகுழி வழக்கு
Reviewed by Author
on
September 21, 2022
Rating:

No comments:
Post a Comment