15 ஆம் திகதியுடன் கோதுமை மா தட்டுப்பாடு முடிவுக்கு வரும்
எவ்வாறிருப்பினும் கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலை 450 ரூபா வரையில் அதிகரித்தால் 450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 350 ரூபா வரையில் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என சிற்றுணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்களும் நுகர்வோரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அநுராதபுர மாவட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க அனுரகுமார பாண் இறாத்தல் ஒன்றின் விலை தற்போது 240 ரூபாவிலிருந்து 270 ரூபாவாக அதிகரித்துள்ளதென குறிப்பிட்டுள்ளார்.
15 ஆம் திகதியுடன் கோதுமை மா தட்டுப்பாடு முடிவுக்கு வரும்
Reviewed by Author
on
September 07, 2022
Rating:
Reviewed by Author
on
September 07, 2022
Rating:


No comments:
Post a Comment