கெளரவமான அரசியல் தீர்வை கோரி மன்னார் முசலி பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது
குறித்த நிகழ்வில், கிராம மட்ட அமைப்புகள் ,விவசாய, மீனவ சங்கங்கள்,பெண்கள் அமைப்புகள் ,சிவில் சமூக அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள்,மன்னார் மெசிடோ மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
குறித்த செயல் திட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களால் 100 நாள் செயற்திட்டத்திற்கான பொது மகஜர் வாசிக்கப்பட்டது
அதே நேரம் அரசியல் தீர்வு விடயத்தில் மக்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான கருத்துக்களும் உள் வாங்கப்பட்டது.
இதன் போது கலந்து கொண்ட மக்கள் பல்வேறு கருத்துக்களை முன் வைத்தனர்.
குறிப்பாக இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற மக்களாகிய எங்களுக்கு கௌரவமான அரசியல் உரிமை ஒன்று இருக்கிறது.
வடகிழக்கில் இருக்கும் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த குரலாக இருக்க வேண்டும்.என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
குறித்த போராட்டம் வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கெளரவமான அரசியல் தீர்வை கோரி மன்னார் முசலி பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது
Reviewed by Author
on
September 02, 2022
Rating:

No comments:
Post a Comment