புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் இன்று
புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 38 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று பதவிப்பிரமாணம் செய்யவுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போது நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக அமைச்சரவைக்கு பதிலாக அடுத்த வாரத்தில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சர்வகட்சி முறையின் கீழ் புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்ற போதிலும் இதுவரையில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் இன்று
Reviewed by Author
on
September 08, 2022
Rating:

No comments:
Post a Comment