மன்னாரில் கனிய மண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் விவகாரம்-மக்கள் விடுதலை முன்னணி மன்னார் பிரஜைகள் குழுவுடன் அவசர சந்திப்பு.
மக்களின் பிரச்சினைகள் குறித்து மன்னார் பிரஜைகள் குழு தொடர்ச்சியாக மக்களுக்காக குரல் கொடுத்து வரும் நிலையில் குறித்த பிரச்சினைகள் குறித்து அறிந்து கொண்டு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம் விஜயம் மேற்கொண்டதாக மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவித்தனர்.
மேலும் மக்களுக்காக பிரஜைகள் குழுவினர் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் முகமாக தாம் மன்னாருக்கு வருகை தந்ததாக கலந்துரையாடலின் போது தெரிவித்தனர்.
மேலும் மன்னார் மண்ணுக்கான போராட்டத்தில் மக்களுடன் மக்கள் விடுதலை முன்னணி என்றும் துணை நிற்கும். எனவே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களுக்காக முன் நிற்க வேண்டும்.என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரம் பிரஜைகள் குழுவினருடனான சந்திப்பின் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் கனிய மண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் விவகாரம்-மக்கள் விடுதலை முன்னணி மன்னார் பிரஜைகள் குழுவுடன் அவசர சந்திப்பு.
Reviewed by Author
on
September 02, 2022
Rating:

No comments:
Post a Comment