மன்னாரில் 'சமுர்த்தி சிப்தொர' புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கி வைப்பு.
சமுர்த்தி அபிவிருத்தி வங்கி ஊடாக சமுர்த்தி உதவி பெறும் பயனாளிகளின் குடும்பங்களில் உள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் சித்தியடைந்து (2021-2023 கல்வியாண்டில் )உயர்தரக் கல்வி யை தொடர்கின்ற மாணவர்களின் கல்வி ஊகக்குவிப்புக் காக குறித்த சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்திலிருந்து 761 மாணவர்கள் இந்த புலமைப்பரிசில் கொடுப்பனவு பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், பாடசாலைகளின் அதிபர்கள் ,சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மன்னாரில் 'சமுர்த்தி சிப்தொர' புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கி வைப்பு.
Reviewed by Author
on
September 02, 2022
Rating:

No comments:
Post a Comment