பிரபல பாடகர் பம்பா பாக்யா மரணம் : திரையுலகினர் சோகம்
அவரது வசீகரிக்கும் குரலில், பாடிய அனைத்துப் பாடல்களுமே தெறி ஹிட் ரகம் தான்.
பம்பா பாக்யா
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ‘ராவணன்’ படத்தில் இருந்தே பாடகராக அறிமுகமானார் பம்பா. 2.0 படத்தின் 'புள்ளினங்காள்', சர்கார் படத்தின் 'சிம்ட்டாங்காரன்', பிகில் படத்தின் 'காலமே', என பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் 'பொன்னி நதி' பாடல் பம்பா பாக்யா பாடியது தான்.
இவரது மரணத்துக்கான காரணம் வெளியாகவில்லை. திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால், நேற்றிரவு 12.30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் பம்பா பாக்யா, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவருடைய திடீர் மரணம் ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. பாடகர் பம்பா பாக்யா காலமான தகவலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.
பிரபல பாடகர் பம்பா பாக்யா மரணம் : திரையுலகினர் சோகம்
Reviewed by Author
on
September 02, 2022
Rating:

No comments:
Post a Comment