அழிக்கப்பட்ட ஓர் இனக்குழுவிலிருந்து தப்பிப்பிழைத்த பிரேசிலின் இறுதி பழங்குடி மனிதர் 23-08-2022 அன்று இயற்கை எய்தியுள்ளார்.
கடந்த 26 ஆண்டுகளாகத் தன்னந்தனியாக அந்த வனப்பகுதியில் பகுதியில் வாழ்ந்துவந்த அந்த மனிதரை 1996-ம் ஆண்டு முதல் பிரேசிலின் உள்நாட்டு விவகார ஏஜென்சியின் (ஃபுனாய்) முகவர்கள் கண்காணித்துவந்துள்ளனர்.
இப்படி கண்காணிக்கும்போதே கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதிக்குப்பின்னர் இவரது நடமாட்டம் தென்படாததும், பின் அவரது சடலம் அவரது குடிலருகில் கிடப்பதும் கண்டறியப்பட்டது.
60 வயதான அவர் இயற்கையாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவர் வசித்த குடிசை பகுதியில் கிடைத்த சான்றுகளின்படி அவர் சோளம், பப்பாளி, வாழை போன்ற பழங்களைப் பயிரிட்டதாக கூறப்பட்டுள்ளது.
பிரேசிலில் தனாரு பகுதியில் வசித்த கடைசி பழங்குடியினத்தின் கடைசி மனிதனும் உயிரிழந்துவிட்டது பிரேசிலில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வாழும்போது கிடைத்திராத அனுதாபமும் கவனஈர்ப்பும் தற்போது அவரது மரணத்தின்மூலம் கிடைத்திருக்கிறது என்றே கூறவேண்டியுள்ளது!
அழிக்கப்பட்ட ஓர் இனக்குழுவிலிருந்து தப்பிப்பிழைத்த பிரேசிலின் இறுதி பழங்குடி மனிதர் 23-08-2022 அன்று இயற்கை எய்தியுள்ளார்.
Reviewed by Author
on
September 06, 2022
Rating:

No comments:
Post a Comment