வஸ்கடுவ, சமகிபுர மகா கால்வாயில் இன்று (23) காலை தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வஸ்கடுவ, நுககொட பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு (22) பெய்த மழையினால் கால்வாயில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும், இன்று காலை நீர் சிறிது சிறிதாக குறைந்த போது ஒருவர் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரதேசவாசிகளின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment