குளிரூட்டப்பட்ட லொறியில் கண்டுபிடிக்கபட்ட 18 புலபெயர்ந்தோர்! ஜேர்மனியில் சம்பவம்
 ஜேர்மனியின் உள்ளூர் ஊடங்களின்படி, குளிரூட்டப்பட்ட லொறிக்குள் அவர்கள் அனைவரும் காற்று புகாத கொள்கலனில் மூடப்பட்டிருந்தனர்
சுங்க அதிகாரிகள் குபென் நகரில் ஒரு வழக்கமான சோதனையின் போது அவர்கள் லொறியில் கண்டுபிடித்தனர். அவர்களில் 5 மற்றும் 10 வயதுடைய இரண்டு குழந்தைகளும் இருந்தனர், மேலும் 14 வயதுடைய இரண்டு ஆதரவற்ற சிறார்கள் இருந்தனர்.
அவர்கள் ஈரான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்று ஜேர்மன் காவல்துறை கூறியது. 
அவர்களில் 12 பேர் ஈரானிலிருந்தும், 4 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்தும், இருவர் ஈராக்கிலிருந்தும் வந்தவர்கள் ஆவர். அவர்களின் வயது ஐந்து முதல் 44 வரை இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
புலம்பெயர்ந்தோர் பதுங்கியிருந்த கண்டெயினரில் சுத்தமான காற்றோ வெளிச்சமோ இல்லை என ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்டவர்கள் பசி, தாகம் மற்றும் கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய நிலையில் அவதியில் இருந்ததாக கூறப்படுகிறது.
குளிரூட்டப்பட்ட லொறியில் கண்டுபிடிக்கபட்ட 18 புலபெயர்ந்தோர்! ஜேர்மனியில் சம்பவம்
 Reviewed by Author
        on 
        
October 18, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 18, 2022
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
October 18, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 18, 2022
 
        Rating: 

 
 
 

 
 
 
 
.jpg) 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment