அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு
வெப்பத் தாக்குதலைத் தடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் எஸ்பிரின் போன்ற அவசரகால மருந்துகள் கொழும்பு பொது வைத்தியசாலையில் கூட பற்றாக்குறையாக உள்ளன.
அறுவை சிகிச்சை செய்யும் போது பயன்படுத்தப்படும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்குள் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, நோயாளிகள் மருந்தகங்களில் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள். எனினும் தற்போது மருந்தங்களிலும் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது.
எனவே நோயாளிகள் வாங்க முடியாத அளவுக்கு மருந்தகங்களில் அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு, மருந்துகளை வாங்க முயலும் நோயாளிகளுக்கு சிம்மசொப்பனமாக மாறியுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக, எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனை போன்ற ஆய்வகங்களில் பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு
Reviewed by Author
on
October 25, 2022
Rating:

No comments:
Post a Comment