மன்னார் 'சதொச' மனித புதைகுழி அகழ்வு பணிக்கான திகதி அடுத்த தவணையில் அறிவிக்கப்படும்
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் 'சதொச' மனித புதைகுழி வழக்கு (B-232/2018) இன்று திங்கட்கிழமை (17) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே வைத்தியர் ராஜபக்ஸ அவர்களுக்கு மன்றினால் அழைப்பானை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில்,அவர் இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் தோன்றி 2022 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 18 ஆம் திகதி (18-05-2022) தான் இதற்கான அறிக்கைகளை அனுப்பி வைத்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
-நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட அறிக்கைக்கு அமைவாக மன்னார் 'சதொச' மனித புதைகுழியை மீண்டும் அகழ்வு செய்வதற்கு என்ன என்ன விடையங்கள் தேவை.அழைக்கப்பட வேண்டிய திணைக்களங்கள் மற்றும் செலவு தொகை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க பட்டிருந்தது.
இந்த அறிக்கைக்கு அமைவாக மன்னார் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.
மன்னார் சதோச மனித புதைகுழி யின் அகழ்வு பணி எப்போது ஆரம்பிப்பது என்பது தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தில் அடுத்த தவணையில் தெரிவிக்கும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-மேலும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம்(ஓ.எம்.பி) சார்பாக ஆஜரான சட்டத்தரணி புராதனி அவர்கள் நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்தார்.
ஓ.எம்.பி யால் உதவு தொகை மேற்கொள்ள முடியும் என்றும் அதற்கான கோரிக்கையினை விடும் பட்சத்தில் காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தில் ஏற்கனவே மேற்கொண்டது போன்ற குறித்த அகழ்வு பணி மேற்கொள்ளுவதற்கு நிதி உதவியை மேற்கொள்ள முடியும் என கூறினார்.
மன்னார் 'சதொச' மனித புதைகுழி அகழ்வு பணிக்கான திகதி அடுத்த தவணையில் அறிவிக்கப்படும்
Reviewed by Author
on
October 17, 2022
Rating:

No comments:
Post a Comment