மன்னாருக்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் சிவில் அமைப்புக்களுடன் சந்திப்பு.
குறித்த மன்னார் மாவட்டத்தின் தற்போதைய நிலவரம், சமகால நிலைமைகள் தொடர்பாக அமெரிக்க துணைத் தூதர் கேட்டறிந்து கொண்டார்.
இதேவேளை இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று மன்னாரில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பின் போது எளுவன்குளம் ஊடாக புத்தளம் மன்னார் பாதை திறப்பதன் அவசியம் பற்றி கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் மன்னாரில் இராணுவத்தினர் மற்றும் கடற்படை ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் காணி விடயம் தொடர்பாகவும் சிலாவத்துறை மத்தியில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாம் முற்று முழுதாக பொது மக்களின் சொந்த காணிகள் என்றும் அவற்றை மக்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது டன் வட மாகாணத்தில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த சந்திப்பில் இணைப்பாளர் குரூஸ்,முசலி பிரதேச சபை உறுப்பினர் தஸ்னீமா,மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் றமீஸா மற்றும் எழுத்தாளர் அஹனாப் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னாருக்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் சிவில் அமைப்புக்களுடன் சந்திப்பு.
Reviewed by Author
on
October 26, 2022
Rating:
Reviewed by Author
on
October 26, 2022
Rating:


.jpeg)




.jpeg)

No comments:
Post a Comment