அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு – சீனி 100 ரூபாவால் குறைந்தது !
அதற்கமைய, பருப்பு கிலோவொன்றின் விலை 685 ரூபாவிலிருந்து 398 ரூபாவாக குறைவடைந்துள்ளது
நாடு அரிசி கிலோவொன்றின் விலை 220 ரூபாவிலிருந்து 165 ரூபாவாகவும்,
வெள்ளை பச்சையரிசி கிலோவொன்றின் விலை 210 ரூபாவிலிருந்து 160 ரூபாவாகவும்,
சீனி கிலோவொன்றின் விலை 375 ரூபாவிலிருந்து 275 ரூபாவாகவும்,
கோதுமை மா கிலோவொன்றின் விலை 395 ரூபாவிலிருந்து 275 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டார் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பால்மா விலை குறைப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இந்த விலை குறைப்பு தொடர்பான சந்தை நிலைமைகளை தொடர்பில் வர்த்தக அமைச்சர் ஊடக சந்திப்பொன்றின் ஊடாக விளக்கமளிப்பாரென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு – சீனி 100 ரூபாவால் குறைந்தது !
Reviewed by Author
on
October 18, 2022
Rating:
Reviewed by Author
on
October 18, 2022
Rating:


No comments:
Post a Comment